Monday, December 1, 2014

மறை நீர் (Virtual water)

மறை நீர் (Virtual water)
பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?
மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.
ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.
புத்திசாலி நாடுகள்!
நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.
இது இந்திய நிலவரம்!
முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.
மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்
வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.
சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.
அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.
ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.
பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.
தண்ணீருக்கு எங்கு கணக்கு?
ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.
இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.
மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.
- The Change

Friday, June 13, 2014

சரவணனின் ஆட்டோகிரேப்......

மைதிலி என்னை காதலி என்று 
விவரம் இல்லா வயதில் விளையாடி திரிந்தவளோ 
இன்று விண்ணை தொடும் மாளிகையில் 
சிங்கார சிங்கப்பூரில் வாழ்கிறாள் ...

தனலட்சுமி போல தரணியில் இவளுடன் வாழலாம் என
மனகோட்டையில் மண் வீடுகட்டி வளர்ந்தவளோ
தலைநகர் சென்னைக்கு வாக்கபட்டு செழுமையாக வாழ்கிறாள்...

எண்ணும் எழுத்தும் கண்ணனென தகும் என 
கனிவுடன் கற்று கொடுத்து அக்கறையாக
அன்பு செழுத்திய கெளரியோ சாப்ட்வேர் இன்சினியர் ஆகி
ஐதாராபாத்தில் அவள் கணவனோடு காலந்தள்ளுகிறாள்...

கட்டிக்கட்டு புள்ளகுட்டி பெத்துக்கிட்டு வாழலாமுன்ன சுதாவை
பட்டிக்காட்டு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுத்து
கொசுவம் கட்டிகிட்டு ஆட்டுகுட்டி மேச்சுகிட்டு பொலப்பை
ஓட்டிகிட்டு இருக்கிறாள்......

பள்ளி விட்டதும் பறந்து வந்து பார்த்தால்தான்
பதைபதைக்கும் மனசு பண்படுதுன்னு சொன்ன
சாந்தியோ சகலமும் மறந்து கேண்டீன்காரனை கட்டி
கேட்பாரின்றி சாந்தியிழந்து தாய் வீட்டில்....

பேரிட்சை பழம் போல பெரிய உதட்டுக்காரி
சாவகாசமாய் சிறைபடுத்திய சந்தியா...
கொங்கு மண்ணில் கோலாகலமாக வாழ்கிறாள்

இன்னும் இன்னும்.....
வசதியை மட்டுமே பார்த்த வசந்தி,
தேடி வந்த தேவதை தேவி,
அருமையான காதலி அருணா,
அன்பான அமுதா,
சொல்லி கொடுத்த வாசவி,
மறக்க முடியாத சங்கீதா...
வியாக்கியனமான வித்யா....
ஜெயா..
உங்களின் ஞாபகங்கள் என்றும் என்றென்றும் பசுமை மாறாமல்
நீக்கமற நிறைந்திருக்கும் என் நெஞ்சத்தில்....
அன்புடன்....சரவணபிரகாஷ்...

பிறந்தநாள் வாழ்த்து

சண்டாளி , சதிகாரி , சர்வாதிகாரி , ஹிட்லர், முசோலினி , பேய் , பிசாசு பூதகி என்று இந்திரா காந்தியை புகழ்ந்தும்

அண்டங் காக்கா , காண்டாமிருகத் தோலர் , எருமைத் தோலர் , மரமேறி , பனை ஏறி , கட்டபீடி என காமராஜரை ஒருமையில் வசை பாடியும்

நடிகன் , காத்தாடி , கிழவன் , மலையாளி , அட்டைக் கத்தி , கோமாளி , ஊமையன் , அலி என்றெல்லாம் மக்கள் திலகத்தை பெருமை படுத்தியும் 

காவிரி தென்பெண்ணை பாலாறு , மூப்பனார் மூளையில்கோளாறு என்று புகழ்ந்தும்

ஐஸ்ப்ரூட் சம்பத் , வாழப்பாடி ஒரு வழிப்போக்கன் , செவிடன் ஜீவானந்தன் , நொண்டி பா. ராமமூர்த்தி , கக்கன் என்ன கொக்கா ? என்றெல்லாம் பேசியும்

குல்லுக பட்டர் ராஜகோபாலாச்சாரி , கைபர் கணவாய் வழியே வந்த வந்தேறி வெங்கட்ராமன் , குரங்கன் பக்தவத்சலம் , துரோகி பண்ருட்டி ராமச்சந்திரன் , ஈனப் பிறவி இரா. செழியன் , சீமான் வீட்டு கன்றுக் குட்டி சின்னப் பைய்யன் ஈ எறும்பு , கொசு , தத்துப் போன ஓசி பணக்காரன் பா சிதம்பரம் .

பண்டாரம் , பரதேசி , கமண்டலம் , காவி உடை , ஆக்டோபஸ் ஜந்துக்கள் , கூனை நிமிர்த்த முடியாத ஒட்டகங்கலான வாஜ்பாய்கள் அத்வானிகள் , இல கணேசன்கள்

ராஜீவ் போல நான் ஒன்றும் வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்துக் கொள்ளவில்லை என்று சோனியாவையும்

காந்தாரி , கவுதாரி , சூர்பனகை , காதறுந்த காலி , மூக்கறுந்த மூளி பால்கனி பாவை , தனியே பேசலாம் வா உனக்கு சேதாரம் எதுவும் ஏற்படாது , என்றெல்லாம் இன்றைய முதல்வரை கவி பாடியும்

துரு பிடித்த வாள் , குளத்தை விட்டு ஓடிய மீன் , கலிங்கப் பட்டி களிமண் என்று வைகோவை கொண்டாடியும்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு பல புதிய புனைப்பெயர்களை வழங்கிய
தமிழ்த்தாயின் தலைமகன் என சொல்லி கொள்ளும்
மூவுலகத் தமிழர்களின் பாசத்தலைவனுக்கு
“பிறந்தநாள் வாழ்த்துகள்”.......

Saturday, March 15, 2014

கேட்டால் கிடைக்கும்

13.11.2013
என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
#கேளுங்கள்_கேட்டால்_கிடைக்கும்
 

அன்பு மகளோ ....

”அப்பா...”....
“சொல்லுப்பா....’....
”நான் பெருசாகி டீச்சர் ஆகிடறேன்பா...”.........
...
சொன்னது.... முதலாம் வகுப்பில்
வகுப்பு தலைவியா இருக்கும்
என் மகள் வானதி.....
...
”ஏம்பா...டீச்சர் வேலை தான் உனக்கு பிடிக்குமா.....”
”இல்லைப்பா....”..
நீங்க தானே அடிக்கடி பணம் இல்லைங்கறீங்க.....அதான்.....
...
... ஓ.... டாக்டருக்கு படிக்க அதிக பணம் செலாவகும்...
அதனால டீச்சர் ஆகறேன்னு சொல்றயா.....
....
”அதில்லைப்பா...”....
...அப்பறம்.....
...
...”டீச்சர் தானே அடிக்கடி
”டேர்ம் பீஸ்” கொண்டு வா....
டைக்கு பெல்ட்டுக்கு பணம் கட்டு.....
”டியூசன் பீஸ்” கொண்டு வா....
சாட்டர் டே யூனிபார்ம்... ..ஸ்போர்ஸ் டிரஸ்
வாஙக பணம் கொண்டு வா...
தீபாவளி போனஸ் கொண்டு வா....
(அதுக்கு பிரச்சனை பண்ணி நாங்க தரலை)...
இப்படி அடிக்கடி பணம் வாங்கறாங்க....
நிறைய்ய பணம் வசூல் பண்ணி வச்சுருக்காங்க.....
நான் டீச்சர் ஆனா இதே மாதரி எல்லோர்த்துகிட்டையும்
வசூல் பண்ணலாம் இல்லையா.....”....

அனுபவம்

அவசர தேவை...
ஒரு செம்பு சொம்பும்.... போன்சாய் ஆலமரமும்...
... 
வெள்ளிகிழமை...
சமூக நலம் கருதும் அமைப்பொன்றில் ஈகோ பிரச்சனை...
நீங்க வந்து தான் தீத்து வைக்கனுமுன்னு சொல்லிட்டாங்க...
நம்மால முடிஞ்சது போய் குட்டையை குழப்பிட்டு வந்தாச்சு...
...
சனிக்கிழமை...
அண்ணன் தம்பி குடும்ப பிரச்சனை ...
நீங்க வந்தா தான் சுமூகமா முடிப்பீங்க ... பிளீஸ்...னு போன்...
போய் அவங்க அவங்க பிரச்சனைகளை கேட்டதுமே ...
நமக்கு பிபி...ஹை...லோ ...எல்லாமுமே வந்துடும் போல...
எப்படி எப்படியோ பேசி.... கோர்ட்டுக்கு போக வச்சாச்சு.....
....
ஞாயித்துகிழமை..
பல ஆண்டுகளாக தீராத சமுதாய சங்க பிரச்சனை...
அறகட்டளை உறுப்பினர் என்ற முறையில் அழைப்பு....
திடீர் .... ஞானோதயமாக நான் சொன்ன செயல்திட்டங்களை
அமுல்படுத்த முடிவெடுத்து கமிட்டியும் அமைத்து....
செயலாக்கும் பொறுப்பை என் தலையில் கட்டி விட்டார்கள்...
....
திங்கட்கிழமை...
கணவன் மனைவி சண்டை...
பிரச்சனைகளை கேட்க ஒருவன் தயார் என்றதுமே..
அருவி போல கொட்டுகிறார்கள் இரு தரப்புமே...
பல பல சந்தேகங்களை கேட்கிற சாக்கில் அவர்கள் மேல்
அக்கறை இருப்பதாக காட்டியதாலே அவர்கள் பிரச்சனை
முடிந்ததாக எண்ணி சந்தோசமாக வழியனுப்பி வைத்தார்கள்...
....
செவ்வாய்கிழமை....
..
...
...
...
....
....
...
....
...
..
.
.
காலை 7 மணிக்கு போன்.
...
என்னது...
..
அப்படியா...
...
இதோ இப்போ வந்துடறேன்...
...
.
.
.
.
திரும்பி பார்த்தா வூட்டம்மா.....
வாசல் தொளிச்சு கோலம் போட்டுட்டு வந்தாங்க
....
போங்கடா நீங்களும் உங்க பஞ்சாயத்தும் ....
ஒரு டீக்கும்... பண்ணுக்கும் .... மீறி போனா சனிக்கிழமை
அண்ணன் தம்பினால அதிர்ஷ்டமா கிடைச்ச பிரியாணிக்கும்
பஞ்சாயத்து பண்ணிட்டு இருந்தா எங்க வூட்டுல ...
”ஏனுங்க உங்க கட்சி சின்னம் இதுதானேன்னு .....
வெளுக்குமாத்த தூக்கிடுவாங்க .......
அப்பறம் நான் பஞ்சாயத்தை கூட்டனும்.....