Thursday, December 12, 2013

தகவல் உரிமை சட்டம்

ஒரு இந்து கோயிலை அறநிலையத்துறை
கையகபடுத்தினால் அதன் அதிகாரிகள் 1951ம் ஆண்டு 
சட்டபிரிவு 25 மற்றும் பிரிவு 29ன் கீழ் 
ஒரு சொத்து பதிவேடு உருவாக்க வேண்டும்...

அதில் கோயிலுக்கு சொந்தமான நகைகள், 
அசையும் சொத்துக்களும்,நிலங்கள்,மரங்கள் உள்ளிட்ட 
அசையா சொத்துக்களும், கோயிலின் மரபுகள்,விழாக்கள்,
சன்னதிகள்,சிலை விபரங்கள், பூஜை முறைகள்,
கட்டளை விபரங்கள், அறங்காவலர்கள் குறித்த விபரங்கள்
அனைத்தும் இடம்பெற்று பராமரிக்க வேண்டும்....
இது அறநிலையத்துறையால் நியமிக்கபடும்
கோயில் நிர்வாகிகளின் அடிப்படை கடமை ஆகும்...

இந்த பதிவேடுகள் ஒழுங்காக பேணபட்டு வருகிறதா என
கண்டறிய ”தகவல் உரிமை சட்டபடி” தமிழகத்தின்
25 முக்கிய கோயில்களில் கேள்விகள் கேட்டதற்கு...
சில கோவில்கள் பதிலே தரவில்லை...

தர மறுத்து வித்தியாசமாக வந்த பதில்களில் சில...

பழனி - ரிஜிஸ்தர் மிகவும் நைந்த நிலைமையில் உள்ளது
வடபழனி - தேடி பார்த்தோம் ரிஜிஸ்தரை காணவில்லை
திருச்செந்தூர் - ரிஜிஸ்தர் மிக பெரியது படி எடுக்க முடியாது.

ராமேஸ்வரம் - அதிகாரிக்கு வேலை பளு அதிகம் ஆகவே
தரமுடியாது. பதில் தந்தால் அலுவலகமே ஸ்தம்பித்து போகுமாம்...
திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில் - ரிஜிஸ்தர் நகல்
கொடுத்தால் அதை வாங்கியவர் கிரிமினல் நடவடிக்கை
செயல்கள் செய்யகூடிய வாய்ப்பிருப்பதால் தர இயலாது.

கிட்டதட்ட எல்லா கோவில்களும் ஒன்று போல பிரிவு 30,31ன்
கீழ் செய்ய வேண்டிய ஆண்டு விபரங்களின் சேர்க்கை,
பத்து வருடங்களின் தொகுப்பு ஆகியன நடைபெறவில்லை
என்று பதில் அளித்துள்ளனர்...
இவையெல்லாம் மிகப்பெரிய கிரிமினல் குற்றங்களாகும்...

SaravanaPrakash Tirupur
http://www.mediafire.com/?j2fivj36ms6fpk6

Friday, November 29, 2013

துரோகிகளை தண்டிக்க....

உனக்கு துரோகமிளைத்தவனை 
எவ்வண்ணமெல்லாம் நீ தண்டிக்கலாம் ?

அகால இரவொன்றில் அவன் அறைக்குள் 
பெட்ரோலூற்றி நெருப்பு வைக்கலாம்,

நல்லவிதமாய் உறவாடி நயவஞ்சக காய்களை 
நகர்த்தி வாழ்வின் பெரும்பாதாளத்தில் கவிழ்கலாம்,

ஊர்பூராவும் அவனை பற்றி அவதூறு பரப்பலாம்,
பார்க்கிற இடத்திலெல்லாம்
பளாரென அவனை அறைய சீறிபாயலாம்,

விடுதியொன்றில் எதேச்சையாய் சந்திக்க
நேர்கையில் முகத்தில் உமிழ்ந்து அவமதிக்கலாம்,

கூலிப்படை கொண்டு குரூரமாய் தாக்கி ஊனப்படுத்தலாம்,

அவன் குடும்பத்தில் உட்பூசல் உண்டாக்கி நிலை குலைக்கலாம்.

காலம் முழுக்க அவன் செய்ததை
எண்ணி எண்ணி சபித்து கொண்டே இருக்கலாம்,

ஒவ்வொரு பொழுதும் அவன் நிம்மதியை அழிக்க‌
ஒரு பொல்லாததை செய்தவாறே இருக்கலாம்....

என்றாலும் எவ்வளவு பழிவாங்கினாலும்
உன் மனரணமும் அழுத்தமும் சினமும் பழியும்
குறையப்‌ போவதே இல்லை....

ஆதலால் நீஅவனை மன்னித்துவிடலாம்...

படித்ததில் பிடித்தது...

கேட்டால் கிடைக்கும்


இன்று (13.11.2013) என் கொழுந்தியாவின் திருமணம்... 
கொங்கு நாட்டின் புகழ்பெற்ற சிவன்மலை..கோயிலில்....

சுற்றத்தாரிடம் குசலம் விசாரித்து கொண்டிருந்த என்னை...
சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டார்கள்... 
(அவ்வளவு பெரிய அப்பாடக்கரா நான்)
....
அலுவலகத்தில் தேவையான ஆவணங்களை
சமர்பிக்கும் போதே திருமண கட்டணம்
மொத்தம் ரூ.1500/.... என சொல்லியிருந்தார்களாம்... 
கடைசியாக கையெழுத்து போட்ட என்னிடம்
ரூ 1500 கொடுத்து கொடுக்க சொன்னார்கள்....
(எந்த ரூபத்திலும் சனி தேடிவரும் போல...)

திருமண கட்டண ரசீது -ரூ.250
கோவில் உபயவரவு ரூ.500
கேமரா கட்டணம் ரூ.100 என மூன்று ரசீது தந்தார்கள்....
ரூ.1500 பணம் கொடுத்துட்டு ரசீதுகளை வாங்கி பார்த்த நான்
அருகிலிருந்த ... என் மனைவியின் தம்பியிடம் .......
”மீதி ரூ.650... தருவாங்க .. ஒழுங்கா வாங்கிட்டு வா”னு சத்தமாக
சொல்லி விட்டு திரும்பி பார்க்காமல் வந்துட்டேன்.....
மறு பேச்சு ஏதுமில்லாமல் ரூ 650 கொடுத்தனுப்பினார்கள்....
கோவில் ஊழியர்கள் .... ஆகவே தான் சொல்கிறேன்....
கேட்டால் கிடைக்கும்

Wednesday, October 16, 2013

தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

நேசமோடு உன்னை நேசித்த போது
நெருப்பாக சுட்டாய்...
அன்போடு அறிவு தெளிவோடு பழகியபின் ...
வாஞ்சையோடு வாழலாம் என்ற போது
கனிவாய் கசிந்துருகி காத்திருக்க சொன்னாய்....
வாழ்வில் ஒரு திருப்பம்....
வஞ்சனை செய்தவனானேன்.....

தோழமையோடு தோள் கொடுத்து
நான் செய்த உதவிகளுக்கு....
காலத்தினால் நீ செய்தவை
ஈடாகுமா இனியவளே....

மண்வீடு கட்டி மனசு பூரித்ததும்
துக்கமயமான இடுகாட்டில்
இட்டுகட்டி நம்மை பேசியதும்...
துன்பத்திலும் இன்பமாக நாம் பேசியதும்...
இனியும் வருமா இனியவளே...

கண் காணாமல் போனால்
கவலை மறக்கலாம்...
காலம் நமக்கு கருணை காட்டலாம்...
எண்ண அலைகள் மோதும் உன் உள்ளம்...
என் நினைவு உண்டா... என ஏங்கும் என் உள்ளம்..
இம்மியளவும் மாறாது நம் இருவர் உள்ளம்...
கடல் தாண்டி கல் திரை இட்டு மறைத்தாலும்
மனதோரம் இருக்குமே சரவணனின்
தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...

முகநூல் பக்கத்திலிருந்து....



அழகு ஓவியமே .... 
அதிர வைக்கும் கொழுசு கட்டி ஆடி வரும்
அழகான மான்குட்டியே..... 
சேலை கட்டினால் 
சோலைகள் சலசலக்குமே....

எள்ளி நகையாடினால் எரிமலையாகுபவளே...
பணியிலும் திமிரு காட்டியவளே....
பூ போன்றவளே ...
புயலாக மாற தயங்காதவளே....

சில நாட்கள் பழகினாலும்
பல யுகங்கள் மனத்திரையில் மறையாதவளே...

அழைத்தால் வந்திடுவேனென்று ...
அழைக்க மறுந்தவளே .... என்னை மறக்க நினைப்பவளே...
நீவிர் வாழ்க பல்லாண்டு... வள்ளுவன் வகுத்த குறள் போல...

செக்க செவந்தவளே...
செப்டம்பரில் மணம் முடிக்க இருப்பவளே.... நீவிர் வளர்க
செந்தமிழின் செழுமை போல.........
செங்கரும்பின் இனிமை போல......
தெவிட்டாத தேனின் சுவை போல ...

நவரத்தினங்களை பெற்று நலமுடன்
இப்பூவுலகில் வளமோடு வாழ வாழ்த்துகிறேன்..


இரட்டை கோபுரங்களை தகர்த்த செப்டம்பர்-11 ...

என் உள்ளமெனும் பூஞ்சோலையில்
வண்ணத்து பூச்சியாக ரீங்காரமிட்டு வந்த
என் தோட்டத்து வெண்ணிலா 
தாமரை போன்ற மேடையிலே
உகந்த மணாளன் கைபற்றி 
உன்னதமான வாழ்வின் அடுத்த அடியான
மனையாள் ஆனாளே.... இன்று...

மனம் மகிழ்கிறது.... 
கிஞ்சித்தும் வருத்தமில்லை....
காண கண் கோடி வேண்டுமே ... நீ
தாங்குவாயோ என்றா நல்லதோர் எண்ணத்தில்
அழைக்க மறந்தாலும் என் உள்ளமெல்லாம்
உங்கள் நலம் சார்ந்தே இயங்குகிறதே .....
வாழ்வீர் நீவிர் வையம் போற்ற......

என்றேனும் என் நினைவுகள்
வந்தால் தோள் சாய்ந்த தோழன்
ஒருவன் இருந்தானே என்ற உன் நினைவுகளே
என்னை மகிழ்விக்கும்... நானறிய வழியில்லையே...

நாலும் தெரிந்தவன் என்றும்
நல்லதொரு தோழன் என்றும்
சிந்திப்பதில் சிந்து பாத்ம் தோற்றானே என்று
சிலோகித்து நீ சொன்ன வார்த்தைகளும்
என் மனக்கண்ணில் வந்து போகுதடி....

இன்னொருவனுக்கு சொந்தமாகி விட்டாய்...
இன்றோடு உன் நினைவுகளில்
எனக்கு சொந்தமானதை மட்டும் வைத்திருந்து
வாழ்கிறேன்.....

பேரிட்சை பழம் போல
பெரிய உதட்டுக்காரி......
கடிதமெழுத சொன்ன கண்மணியே...
எழுதிவிட்டேன் என் இறுதி கடிதம் தனை...

பாவியிவன் பார்வை பட கூடாதென்று
பறக்க போகும் பாவையே....
மதியூகியாய் இருந்தவளே....
மனமெல்லாம் நிறைந்தவளே....
காலமெலம் நீ கண் கலங்கமல் வாழனும்....
என்றும் என்னிடம் நீ என்னால் முடிந்த
உதவிகளை எதிர்பார்க்கலாம்.. நண்பனாய்...
உதவ காத்திருக்கிறேன் ... உத்தமியே.......

என் எண்ணங்கள் உன் வண்ண வாழ்வின் நலனையே விரும்புகிறது...
வாழ்க பல்லாண்டு ..... பல்லாயிரத்தாண்டு......


தோள் சாய்ந்த தோழமை நினைவுகள்...
முகநூல் பக்கத்திலிருந்து....

Monday, July 8, 2013

எனது முகநூல் பக்கதிலிருந்து....

நம் கைக்கு வரும் பெரிய தொகைகள் கூட
மதிப்பில்லாத சிறியதொகையாக `இவ்வளவுதானா`
என்ற ஏக்கத்தோடு வாங்க வேண்டியதிருக்கிறது...

நாம் கொடுக்கும் சிறிய தொகையை கூட
`இவ்வளவு` கொடுக்கனுமா? என்ற
அங்கலாய்ப்பு மனதை விட்டு அகல மறுக்கிறது......

எனக்கும் மட்டும் தான் இப்படியா......?

....

கொங்கு தனி மாநிலத்தை உருவாக்குவோம்-பெஸ்ட் ராமசாமி

எதுக்குங்க சார் .... ரம்மி ஆடவா..... 
(திருப்பூர் நண்பர்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்)

...

தமிழகத்தில் மேலும் 11 லட்சம் 
மின் இணைப்புக்கள் வழங்கப்படும்,- முதல்வர்.....

ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லை...
அவனுக்கு 56 பொண்ட்டாட்டி கேக்குதாமாம்.........?....

...

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - தமிழக அரசு...

ஜூன் 3 ன் தேதி கலைஞரின் பிறந்தநாள் என்பதால், கலைஞரின் பிறந்த நாளை கொண்டாடவே விடுமுறை ....

...

நிறைவேறாத காதலும் காமமும்
சில நேரங்களில்
கற்பனை துளிகளிலேயே முடிந்துவிடுகின்றன

...

எதுவும் கடந்து போகும் 
என்பதையும் கண்டு கொண்டேன்...
பொறமையை கூட
பொசுக்க கற்று கொண்டேன்...
துரோகத்தையும் ஏற்கும் 
பக்கவம் அடைந்து விட்டேன்...
கோபத்தை கூட 
கொன்றொழித்து விட்டேன்...
மோகத்தை வெல்ல ஒரு வழி கண்டேன்
எனில் ஞானம் தனை அடைந்திடுவேனே .....

...

டீசல் பெட்ரோல் விலை ஏறிவிட்டது என்று மக்கள் யாரும் நடந்தா போகிறார்கள்......-ஞானதேசிகன்-

நான் அப்பவே சொன்னேன்ல...
தம்பி பார்க்கத்தான் பொரி உருண்டை மாதரி இருப்பாரு ..
நல்லா கருத்தா பேசுவாப்லன்னு...

...


Saturday, June 22, 2013

"தங்கம் வாங்காதீர்கள்”

நாட்டு நலனில் (இதில் மட்டும்)
அக்கறையுள்ள நிதியமைச்சர் சொல்கிறபடி

”மக்களே தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்”

தங்கம் ஒரு தேசத்தின் கையிருப்பில் இருந்தால், அந்த தேசத்துக்கே மதிப்பு அதிகம். அதே தங்கம் தேச மக்களிடம் அதிகமாக இருந்தால் அதன் மதிப்பு மிகவும் ஆபத்தைச் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் , உலகிலேயே ஒரு பொருளை உற்பத்தியே செய்யாமல், அதே பொருளை உலகிலேயே அதிகமாகப் பயன்படுத்தும் ஒரே நாடு இந்தியாதான்.

அதாவது ஒரு கிராம் தங்கம்கூட உற்பத்தி செய்யாமல், ஏற்றுமதியும் செய்யாமல், அதே தங்கத்தை அளவுக்கு அதிகமாக இறக்குமதி செய்வதால், நாம் செலுத்தவேண்டிய அந்நியச் செலாவணி அதிகமாகிறது. அதாவது, மென்பொருள் ஏற்றுமதி செய்து சம்பாதித்த காசை தங்கமாக இறக்குமதி செய்து வீணடிக்கிறோம். ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாகும்போது அந்த நாடு ஏழை நாடுகளின் பட்டியலுக்கு விரைந்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்.

17000 டன் தங்கம் இந்தியர்கள் கையில் இருக்கிறது என்கிறார்கள். ஆண்டுக்கு 400 டன் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம், சீனா தனக்கான தங்க ஏற்றுமதியை அதிகப்படுத்திக்கொண்டே வருகிறது. இந்தியாவுக்கு தங்கத்தை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் வீழ்ச்சிக்காக சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது நமது எதிரி நாடான சீனா...

இன்றைய தேதியில், இந்தியப் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தல் நமது தங்க இறக்குமதி. இந்தியர்களிடம் அதிகத் தங்கம் இருக்கிறது என்பது பெருமைக்குரிய செய்தி இல்லை.அதனை சீர் செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே நினைத்தாலோ, கையிலிருக்கும் காசு , காசாகவே நிலைக்கவேண்டும் என்று நினைத்தாலோ, தயவு செய்து தங்கம் வாங்காதீர்கள்

நாம் தங்கத்துக்கு செலுத்தும் மதிப்பு அதன் உண்மையான மதிப்பு இல்லை. உண்மையில், உற்பத்தி, போக்குவரத்து மற்றும் வேலையாள் செலவுகள் மற்றும் லாபம் சேர்த்து, ஒரு கிராம் தங்கம் இன்றைய தேதிக்கு 589 ரூபாய் வரை விற்கமுடியும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அதாவது அதன் பயன்பாட்டு மதிப்பு அவ்வளவுதான். அப்படியானால், நாம் கொடுக்கும் 2500 சொச்சம்...? அதற்கான பண்ட மாற்று மதிப்பு! அது என்று வேண்டுமானாலும் தொபுக்கட்டீர் என்று பள்ளத்தில் விழுந்து மொக்கையாகி கிராம் 1000 ரூபாய்க்கு வர வாய்ப்பிருக்கிறது.
நன்றி சுரேகா

Friday, March 29, 2013

அன்புள்ள ஆசிரியருக்கு ....

ஆப்ரகாம் லிங்கன் தன்னுடைய மகனின் 
பள்ளி ஆசிரியருக்கு எழுதிய அற்புதமான கடிதம் 
அனைவருமே படிக்கவேண்டிய கடிதம் 
சாரு நிவேதிதா அவர்களின் இணையதளத்திலிருந்து .....

அன்பு மிக்க ஆசிரியருக்கு,

எனது மகன் நிறைய கற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது

எல்லா மனிதர்களும் நியாயமானவர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் உண்மையானவர்கள் அல்ல. ஆனால் அவனுக்கு கற்றுக்கொடுங்கள்… ஒவ்வொரு போக்கிரி உள்ள இடத்திலும் ஒரு வீரன் உண்டு; ஒவ்வொரு சுயநலமான அரசியல்வாதி உள்ள இடத்திலும் ஒரு தன்னலம் கருதாத தலைவன் உண்டு. ஒவ்வொரு பகைவனுக்கு இடையிலும் ஒரு நண்பன் உண்டு.

இதற்குக் காலம் அதிகம் எடுத்துக் கொள்ளும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களால் முடியுமானால் அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நாம் ஈட்டியது ஒரு டாலர் என்றாலும் கண்டெடுத்த ஐந்து டாலர்களைக் காட்டிலும் அது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும்.

தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவனை விலகி இருக்கச் சொல்லுங்கள்.

மனம்விட்டு சிரிப்பதன் ரகசியத்தை அவனுக்கு கற்றுக் கொடுங்கள். நயவஞ்சகர்களை எளிதில் அடையாளம் காணவும் ஆரம்பத்திலேயே அவன் கற்றுக் கொள்ளட்டும்.

புத்தகங்கள் என்ற அற்புத உலகின் வாசல்களை அவனுக்குத் திறந்து காட்டுங்கள். மேலும், வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும் பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிப்பதற்கு அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விடவும் தோல்வியடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரடர்களிடம் கடினமாகவும் அணுகுவதற்கு அவனுக்குப் பயிற்சி அளியுங்கள்.

கும்பலோடு கும்பலாகக் கரைந்து போய் விடாமல் எந்தச் சூழ்நிலையிலும் தனது சொந்த நம்பிக்கையின்படி சுயமாகச் செயல்படும் தைரியத்தை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எல்லா மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும். என்றாலும் அதையெல்லாம் வடிகட்டி நல்லவற்றை மட்டுமே பிரித்து எடுத்துக் கொள்ள அவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்பதை அவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணீர் சிந்துவதில் தவறில்லை என்றும் அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

போலியான நடிப்பைக் கண்டால் எள்ளி நகையாடவும், வெற்றுப் புகழுரைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்குப் பயிற்சி கொடுங்கள்.

நம் திறமையையும், அறிவாற்றலையும் விற்பதில் தவறே இல்லை; ஆனால் அது நமது மனசாட்சியையும் ஆன்மாவையும் பணயம் வைப்பதாக இருந்து விடக்கூடாது என்பதை அவனுக்கு கற்றுக் கொடுங்கள்.

பெருங்கும்பல் திரண்டு வந்து கூச்சலிட்டாலும், நியாயம் என்று தான் நினைப்பதை நிலைநாட்டுவதற்காகத் தொடர்ந்து போராடுவதற்கு அவனுக்கு நம்பிக்கை அளியுங்கள்.

அவனை அன்பாக நடத்துங்கள். ஆனால் அதிக செல்லம் கொடுத்து மற்றவர்களைச் சார்ந்திருக்க வைத்து விட வேண்டாம். ஏனென்றால் புடம் போட்ட இரும்பு மட்டுமே மிகச் சிறந்ததாக மாறுகிறது.

தவறு கண்டால் கொதித்து எழும் துணிச்சலை அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். அதே வேளையில்தனது வலிமையை மௌனமாக வெளிப்படுத்தும் பொறுமையை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

அவன் தன்மீதே மகத்தான நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் மனித குலத்தின் மீது அவன் மகத்தான நம்பிக்கை கொள்வான்.

இது ஒரு மிகப் பெரிய சவால்தான்; இருந்தாலும் இதில் உங்களுக்குச் முடிந்ததையெல்லாம் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுங்கள்.

அவன் மிக நல்லவன், எனது அன்பு மகன்.

ஆப்ரஹாம் லிங்கன்.

நன்றி ..சாரு நிவேதிதா ...அவர்களின் இணையதளம்

Wednesday, March 6, 2013

நன்றி

மக்கள் பிரச்சனை கூட இல்லை
ஒரே ஒருத்தர் வீட்டு பிரச்சனை.....(வாய்க்கா தகராறு)...
எத்தனையோ அதிகாரி வந்தார்கள்....(வர வைத்தேன்)
`கவின்சிலர் கிட்ட சொன்னீங்களா`ன்னாங்க..
இல்லைங்க... சட்டபடி என்ன பண்ணனுமோ அதை செய்ங்கன்னேன்....

`ஒரு வார்த்தை அவர்கிட்ட சொல்லுங்க`ன்னாங்க....
அழைத்தேன்.....நேற்று மாலை... (அரை மனதோடு)
சுருக்கமா சொன்னேன்....
பார்க்க எப்ப வரலாமுன்னேன்....
`நானே வரேன்.. இடத்தை சொல்லுங்க`
சொன்னேன் ....

எந்த பந்தாவும்மில்லாமல் .....
இன்று காலை 7.30 க்கு வந்தார்
மாற்று கட்சிகாரர்.... சொந்த கட்சிக்காரர்....
ஓட்டு அரசியல் ........ எதையும் பார்க்காமல்
உடனடியாக ஞாயமான தீர்வு சொல்லிவிட்டு
முழுக்க ஆதரவு தெரிவித்துவிட்டு பறந்தார்.....

நன்றி கலந்த பாராட்டுக்கள்...
திருப்பூர் 52 வது மாமன்ற உறுப்பினர்
திரு.கோவிந்தராஜ்.....தேமுதிக...
பாராட்ட... 98422 43356

Tuesday, March 5, 2013

கேட்டால் கிடைக்கும்,

ஏழ்மை நிலையில் உள்ள உறவினர் இறந்ததிற்கு 
குடுபத்தினர் இறப்பு சான்றிதழ் வாங்க சென்றிருக்கிறார்கள்... 

பணம் 200 தந்தால் தான் தர முடியும் என சொன்னார்களாம் ..... 
திருப்பூர் பழனியம்மாள் பள்ளி எதிரே உள்ள 
பிறப்பு இறப்பு சான்று வழங்கும் அலுவலக ஊழியர்
ராஜேந்திரன் (92456 03242).........

நான் சென்றேன்.....

ராஜேந்திரன் யாருன்னு கேட்டு சீட்டை காட்டி எவ்வளவு பணம் தருனுமுன்னு சத்தமாக கேட்டேன்....

ஒன்னும் தரவேண்டாங்க ...
அதிகாரி கையெழுத்து போட லேட் ஆயிருச்சு
இந்தாங்க சான்று என கைமேல் கொடுத்து அனுப்பி வைத்தார்

தெரியாமத்தான் கேக்கறேன் என்னை பாத்தா உங்களுக்கு எப்படிங்டா தோனுது.................



Saturday, March 2, 2013

ஆறடி மண் கூட இல்லை

இதயம் பலவீனமானவர்கள்
கடனில் மூழ்கி தத்தளிப்பவர்கள்
வருமானத்திற்க்குள் வாழ்க்கை நடத்த முடியாதவர்கள்
தயவு செய்து படிக்க வேண்டாம்.....

அய்யா புண்ணியவான்களே......
ஒரு 3 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் கடனுக்கு 
வட்டி கட்ட முடியாம கஷ்ட படறேன்.............
ம்....ம்...ம்.....ம்.....ம்............ம்....ம்.......ம்...........

ஆறடி மண் கூட உங்களுக்கு சொந்தம் இல்லை.....
அதுக்கு கூட மின்மயானம் வந்துருச்சு......

பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!

டெல்லி: முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.

அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்’ மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

- இவ்வாறு அந்தப் பத்திரிகை பட்டியல் இட்டுள்ளது.


Tuesday, February 26, 2013

தமிழ் எண்கள்

ஒவ்வொரு தமிழனும் அறிந்திருக்க வேண்டிய....
அருமையான சொற்றுடர் ...

கடலை 
உருண்டையை 
நுனுக்கி 
சப்பி 
ருசித்து 
சாப்பிடு 
என்று
அம்மா 
கூறினார்கள்
அய்`யா` .........

...
...
கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
...
..
...
இந்த வாக்கியத்தி மனனம் செய்தல் 
போதும் தமிழ் எண்ணுருக்களை சுலபமாக எழுதலாம்...
...
...
...
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10

123456789101001000

Thursday, January 24, 2013

இன்ப `ஷாக்` அடித்த கரண்ட்

சபாஷ் நண்பரே...
நண்பர் மணி ஒரு பனியன் கம்பனியின் மேலாளர்...
நேற்று (23.01.2013) மதியம் அலை பேசினார்...

மணி:  அண்ணா.... மணி பேசறேன்.... (என்னை விட மூத்தவர்)  
நான் : சொல்லுங்க மணி....
மணி;  எங்க அக்கா வீடு கட்டியிருக்காங்க....
நான் ; வாழ்த்துக்கள்.......( பணம் கீது கேட்டுருவாரோ)

மணி; கரண்ட் லைன் வாங்க நேத்து ஆபிஸுக்கு போனாங்க...
நான்: சரி....( நமக்கு ஏதோ வேலை வந்துருச்சு)
மணி: ஆபிஸ்ல பணம் 2500 வாங்கியிருக்காங்க.... லைன் வர
            பத்து நாள் ஆகுமாம்... லைன் கொடுக்கும் போது
            ரூ 1000 கொடுக்கனுமாம்...அப்படியாண்ணா....?
நான்; 2500 க்கு ரசீது கொடுத்தாங்களா?
மணி:  50 ரூவாய்க்கு ஒன்னு 1550ரூவாய்க்கு ஒன்னு தந்தாய்ங்க...

(புரிந்து விட்டது..... ஒருமுனை மின் இணைப்பு வாங்க இவ்வளவுதான்....
மீதம் 900 ரூபாயும் மறுபடி 1000 ரூபாயும் அன்பளிப்பு........

ரூ 50 விண்ணப்பகட்டணம் கட்டி விண்ணப்பித்தால் ஏழு நாட்களுக்குள்
இணைப்பு கொடுத்தே ஆகவேண்டும் . இல்லையெனில் தாமதிக்கும்
ஒவ்வொரு நாளுக்கும் ரூ100 இழப்பீடு நுகர்வோருக்கு வழங்க வேண்டும்...
மீட்டர் கட்டணம் + இணைப்பு கட்டணம்=1550 மட்டுமே.......

களபணி உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டுத்தான்
விண்ணப்ப கட்டணம் வாங்கி ரசீது போடுவார்கள்....)

நான் : என்ன பண்ணலாம்?
மணி: நீங்க சொல்றதை செய்யலாம்....
நான் ; அக்காவை பாத்து கேட்டுக்கங்க.... மின் துறை விஜிலென்ஸ்
             போலாம்..... மீதம் 1000 கொடுக்கும் போது புடிச்சரலாம்...
மணி: சரிங்க.....

அரை மணி நேரம் கழித்து.......

மணி; அக்கா வேண்டாமுண்ணுட்டாங்க......
             கரண்ட் கிடைக்காதுண்ணு பயப்படறாங்க......
நான் ; என்ன பண்ணலாம்?
மணி; ஏதோ ஒன்னு பன்னுங்க.... நாங்க வரமாட்டோம்......
           
   ( என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை ... )

யோசித்தேன்....
தகவல் உரிமை சட்டத்துல கிடுக்குபுடி கேள்வி கேட்கலாமா?        
நாள் ஆயிரும் ... ஆனா சாதிச்சரலாம்......
யோசித்து கொண்டே ... இணையத்தை உயிர்பித்தேன் ...
TNEB... இணைய பக்கத்தில் தொடர்பு கொள்ள என்ற பகுதியில்
அந்த ஏரியா JE எண் கண்டு புடிச்சு பேசினேன்....

நான் ; வணக்கம் சார் ...என் பேரு சரவணன்ங்க...
             திருப்பூர் தாராபுரம் ரோட்டுல இருந்து பேசறேன்....
     JE; சொல்லுங்க...
 நான்; எம் ஜி ஆர் நகர்ல... பாக்கியலட்சுமி அக்காகிட்டே லைன்
              கொடுக்க 2500 வாங்ட்டீகளாம்......
      JE : நேர்ல வாங்க ... பேசலாம்.....
நான்: நேர்லயெல்லாம் வரமுடியாதுங்க....
       JE: அவங்களை வரசொல்லுங்க....... விசாரிக்கிறேன்.....
நான் : அவங்க வந்து தான் பணம் அதிகமா வாங்கியிருக்கீங்க....
              அவங்க இனி வரமாட்டாங்க......
              நீங்க போய் அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு பணம்
             திருப்பி தர முடியுங்களா? முடியாதா? ... நீங்க ஒரு அதிகாரி
             உங்களை சங்கடபடுத்த விரும்பலை....
              இனி உங்க விருப்பம்.....
     JE: நான் விசாரிக்கிறேன்..........

ஒரு மணி நேரத்தில் அவுங்க வீட்டுக்கு போய் பாத்துட்டு ஆள்
இல்லாததால் அந்த அக்கா வேலை செய்யற கம்பனிக்கு போய்
பணம் 900த்தை கொடுத்துட்டு மன்னிப்பு கேட்டுருக்காங்க..........
சாயந்தரம்  வீட்டுக்கு வந்தா  EB காரங்க வீட்டுல காத்துட்டு இருக்காங்க...
லைன் கொடுக்க...............

 பணம் 2500 மறுபடியும் 1000 கொடுத்தாலும் பத்து நாள் ஆகுமுன்னு
சொன்னவங்க இரண்டு மணி நேரத்துல லைன் கொடுத்ததை
பாத்து ஆச்சிரிய பட்டு நண்பர் மணி எனக்கு போன் பண்ணினார்

மணி: என்னண்ணா சொன்னீங்க.... உடனே லைன் வந்துருச்சு...
நான்: உண்மையை சொன்னேன்.............( பாட்ஷான்னு நினைப்பு)




 புதியவீடும் மின் இணைப்பும்
எங்க வீட்டுக்கு கரண்ட் வந்த கதை கிளிக்பண்ணி படிச்சு பாருங்க...




  

Wednesday, January 9, 2013

திருப்பூர் குமரன்


1932 ஆம் ஆண்டு.  ஜனவரி9
தமிழகத்தில் ‘சட்ட மறுப்பு இயக்கம்’ என்ற அஹிம்சை போராட்டம் பரவிக் கொண்டிருந்தது. அச்சமயத்தில் திருப்பூர் தேசபந்து இளைஞர் மன்ற தலைமையகத்தில் உறுப்பினர்கள் மறுநாள் நடக்கவிருக்கும் மறியல் போராட்டத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலேய கைகூலிகளான காவல்துறையினரை எதிர்க்க யார் தான் முன் வரப் போகிறார்கள்?
”நான் தலைமை ஏற்கிறேன்”
முன் வந்தவர் பெயர் குமரன்.
”குமரா, இதன் அபாயத்தை நீ அறிவாய் அல்லவா?”

 கேட்டவர் பி.எஸ் சுந்தரம் குழுவிலேயே கொஞ்சம் வயது மூத்தவர்
“நன்றாக அறிவேன்” என்றார் அந்த வீரர்.
முடிவாக போராட்டத்திற்க்கு பி.எஸ் சுந்தரம் தலைமை ஏற்கவும் குமரன் உள்ளிட்ட பதினொரு இளஞ்சிங்கங்கள் ‘சட்ட மறுப்பு இயக்க’ த்தை முன்னெடுப்பது என்றும் முடிவானது.
மறுநாள் ஜனவரி10
 நகரத்தின் மையத்தில் 
(இன்றைய குமரன் சாலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு)
பி.எஸ் சுந்தரம் தலைமையில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது காவல் படையினர் அணி வகுத்து எதிர் திசையிலிருந்து வந்தனர்.
“கலைந்து செல்லுங்கள். உடனே கலைந்து செல்லுங்கள்”
கலைந்து செல்லவா கூடியிருக்கிறார்கள்.....

அவர்கள் எதிர்பார்த்தது போல் ஒருவரும் கலைந்துச் செல்லவில்லை. 
குமரன் தேசியக் கொடியை பிடித்துக் கொண்டு கூட்டத்தின் முன் வரிசையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார். கூட்டத்தின் இறுமாப்பை பார்த்து வெகுண்ட வெள்ளைகார கூலி காவல் படை தலைமை அதிகாரி முகமது “சார்ஜ்” என்று ஆணையிட்டார். 
காவலர்கள் சிதறி ஓடிச் சென்று போராட்ட வீரர்களை தடியினால் அடிக்க தொடங்கினர்.  கூட்டம் அசையவில்லை. அதிகாரி குமரனை நெருங்கி “நீ கொடியை கீழே போட்டுவிட்டால் கூட்டம் கலைந்துவிடும். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்.” என்று கூறினார்.
”என் தேசக் கொடியை கைவிட கையூட்டு கொடுக்கத் துணிந்த கயவனே. அது உன் கனவிலும் நடக்காது” என்று பதிலளித்த குமரன், போராட்ட வீரர்களுடன் சேர்ந்து ”வந்தே மாதரம்! வந்தே மாதரம்” என்று கோஷங்கள் எழுப்பினார்.
ஆத்திரமடைந்த ஒரு காவலாளி தன் கைத்தடியால் குமரனின் கபாலத்தில் ஒங்கி அடித்தார். கபாலம் பிளந்து உடல் முழுவதும் ரத்தம் சிந்தியது. 
அந்த நிலையிலும் கையிலிருந்த தேசிய கொடியை கீழே விடாமல் மயக்கமுற்றார். 
திருப்பூர் குமரன் நினைவு இல்லம் .திருப்பூர் ரயில் நிலையம் முன்பு.
ஜனவரி11
மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் தன் இருபதெட்டாவது வயதில் குமரன் உயிர் துறந்தார்.
தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரை அர்பணித்த திருப்பூர் குமரன் அன்றிலிருந்து “கொடி காத்த குமரன்” என்று அழைக்கப்பட்டார்.
உம் நினைவு நாளில் நம்நாடு இன்று உமக்காக தலை வணங்குகிறது. திருப்பூர் பெருமை கொள்கிறது.....